நீட் தேர்வினால் மாணவி அனிதாவின் மரணம்
வகுப்புகளை புறக்கணித்து மாணவர் ஆர்பாட்டம்
இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் மாணவி அனிதாவின் மரணத்திற்கு காரணமான மத்திய மாநில அரசுகளைத் கண்டித்து கிருஷ்ணகிரி கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் முருகன் தலைமையில் நடைப்பெற்ற இந்த கண்டன அர்பாட்டத்தின் போது ஏழை எளிய மக்கள் பாதிக்கும் வகையில் உள்ள நீட் தேர்வை நீக்க வேண்டு மாணவி அனிதாவின் தற்கொலைக்கு காரணமான மத்திய மாநில அரசுகள் பதவி விலக வேண்டும்.
உடனடியாக நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும். மாணவி அனிதாவை இழந்து குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வழியுறுத்தி கண்டன கோசங்களை எழுப்பினார்.
செய்தி எம்.வடிவேல்