பயணிகள் வருகை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு ஜூன் 20- ஆம் தேதி முதல் மேலும் சில சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, ஜூன் 20- ஆம் தேதி அன்று சென்னை எழும்பூர்- தஞ்சாவூர் (06865), ஜூன் 21- ஆம் தேதி அன்று தஞ்சாவூர்- சென்னை எழும்பூர் (06866), ஜூன் 20- ஆம் தேதி ஆண்டு சென்னை எழும்பூர்- கொல்லம் (06101), ஜூன் 21- ஆம் தேதி அன்று கொல்லம்- சென்னை எழும்பூர் (06102), ஜூன் 20- ஆம் தேதி அன்று டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல்- திருவனந்தபுரம் (02695), ஜூன் 21- ஆம் தேதி அன்று திருவனந்தபுரம்- டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் (02696), ஜூன் 20- ஆம் தேதி அன்று டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல்- ஆலப்புழா (02639), ஜூன் 21- ஆம் தேதி அன்று ஆலப்புழா- டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் (02640), ஜூன் 20- ஆம் தேதி அன்று டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல்- மேட்டுப்பாளையம் (02671), ஜூன் 21- ஆம் தேதி அன்று மேட்டுப்பாளையம்- டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் (02672), ஜூன் 20- ஆம் தேதி அன்று சென்னை எழும்பூர்- ராமேஸ்வரம் (06851), ஜூன் 21- ஆம் தேதி அன்று ராமேஸ்வரம்- சென்னை எழும்பூர் (06852), ஜூன் 20- ஆம் தேதி அன்று கோவை- நாகர்கோவில் (02668), ஜூன் 21- ஆம் தேதி அன்று நாகர்கோவில்- கோவை (02667), ஜூன் 20- ஆம் தேதி அன்று திருவனந்தபுரம்- மதுரை (06343), ஜூன் 21- ஆம் தேதி அன்று மதுரை- திருவனந்தபுரம் (06344) இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜூன் 20- ஆம் தேதி அன்று மதுரை- புனலூர் (06729), ஜூன் 21- ஆம் தேதி அன்று புனலூர்- மதுரை (06730), ஜூன் 21- ஆம் தேதி அன்று சென்னை எழும்பூர்- திருச்சி (02653), ஜூன் 20- ஆம் தேதி அன்று திருச்சி- சென்னை எழும்பூர் (02654) சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.