Skip to main content

தென்னிந்திய டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியன் முறைகேடு!- சங்கத்தலைவர் ராதாரவிக்கு எதிரான புகாரை விசாரிக்க உத்தரவு!

Published on 28/11/2019 | Edited on 28/11/2019

தென்னிந்திய டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியன் தலைவர் நடிகர் ராதாரவி மீதான புகார் குறித்து விசாரணை நடத்த தொழிற்சங்க பதிவாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 

தென்னிந்திய டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியனின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்நிலையில்,  சங்கத்தின் வரவு, செலவு கணக்குகளை முறையாகப் பராமரிக்காத சங்கத்தின் தலைவர் ராதாரவி மற்றும் செயலாளர்களுக்கு எதிராக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிட சங்கத்தின் உறுப்பினர்கள் மயிலை குமார், காளிதாஸ் உள்ளிட்ட மூன்று பேர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

 South Indian dubbed Artist Union ACTOR RADHARAVI scam HIGH COURT ORDER


அதில், சங்கத்தில் அனுமதிக்கப்பட்டதை விட அதிக சந்தா வசூலிக்கப்படுவதாகவும், சங்க நிதி மேலாண்மையில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமல் ஆண்டறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக தொழிற்சங்கப் பதிவாளரிடம் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டது.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், சங்கத் தலைவர் ராதாரவிக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள புகாரின் மீது விசாரணை நடத்தும்படி தொழிற்சங்க பதிவாளருக்கு உத்தரவிட்டதோடு, இவ்வழக்கையும் முடித்து வைத்து உத்தரவிட்டார்.

 

சார்ந்த செய்திகள்