



Published on 08/12/2021 | Edited on 08/12/2021
இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 75வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.பி. ரஞ்சன்குமார் தலைமையில் இன்று (08.12.2021) காலை 10.30 மணியளவில் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு மத்திய சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் விக்டரி எம்.மோகன், மாநில செயலாளர்கள் அயன்புரம் கே.சரவணன் மற்றும் டி.விஜயசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னணித் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னணி அமைப்புகள் மற்றும் துறைகளின் தலைவர்கள், நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்.