மதுரையில் பள்ளி மாணவன் துப்பாக்கி சுடும் போட்டியில் சாதனை!
மதுரை கோசகுளத்தில் அமைந்துள்ள சி.இ.ஒ.ஏ பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவன் துப்பாக்கி சுடும் போட்டியில் சாதனை புரிந்துள்ளான்.
மதுரை கோசகுளத்தில் அமைந்துள்ள சி.இ.ஒ.ஏ பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவன் துப்பாக்கி சுடும் போட்டியில் சாதனை புரிந்துள்ளான்.
கடந்த 2015ஆம் ஆண்டு துப்பாக்கி சுடுதலில் ஒபன் ஸைட் பிரிவில் நான்காம் நிலையில் இடம் பிடித்த இச்சிறுவன் 2016 ஆம் ஆண்டு மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் 15க்கு கீழ் 10மீ பிரிவில் மூன்றாம் பிரிவில் இடம் பெற்று வெண்கலம் வென்றான்.
இதேபோல் 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய அளவில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் குழுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் ஒன்றும், வெள்ளி பதக்கம் இரண்டும் பெற்றான். குழு போட்டிகளில் நான்கு தங்கமும், ஒரு வெள்ளியும் பெற்றுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
- முகில்
- முகில்