
திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள 1 கிலோ 789.500 கிராம் எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் நேற்று இரவு துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஆன் பயணி ஒருவர், மலக்குடலில் மறைத்து வைத்து கடத்தி வந்துள்ள ரூ.60,42,685 மதிப்புள்ள 995.500 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதேபோல், நேற்று இரவு சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஆண் பயணி ஒருவர், தனது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்து கடத்தி வந்த 700 கிராம் எடையுள்ள 7 தங்க பிஸ்கட் மற்றும் 94 கிராம் எடையுள்ள தங்க நகைகளை(மதிப்பு ரூ.47,75,400) சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று மட்டும் திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 8 லட்சத்து 18 ஆயிரத்து 85 மதிப்புள்ள 1 கிலோ 789.500 கிராம் எடையுள்ள தங்கத்தை பறிமுதல் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.