![Sivakasi fireworks factory accident](http://image.nakkheeran.in/cdn/farfuture/VdZzRBE9p8isbCRY28DKn1bWzx8d8dcFiyyhTm5wjDI/1583331876/sites/default/files/2020-03/ryttytyt.jpg)
![Sivakasi fireworks factory accident](http://image.nakkheeran.in/cdn/farfuture/Km1fT1-toS1w5wOfZEy_B7dekEfKjL-dEa0m5P0EanE/1583331876/sites/default/files/2020-03/yuiyi.jpg)
![Sivakasi fireworks factory accident](http://image.nakkheeran.in/cdn/farfuture/3ZlDiTmGoGmvzBnEqvIJXzW-dpyHFy6nOY-2RETwfc8/1583331876/sites/default/files/2020-03/567j.jpg)
![Sivakasi fireworks factory accident](http://image.nakkheeran.in/cdn/farfuture/Dm1hdfTucCcPwIz7y-G_0rxPo2dH91WRqxWbQZj809Y/1583331876/sites/default/files/2020-03/tytuyty.jpg)
Published on 04/03/2020 | Edited on 04/03/2020
சிவகாசி அருகே காக்கிவாடான்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டாசு ஆலையின் மூன்று அறைகள் தரைமட்டமானது. சம்பவ இடத்திலேயே குருசாமி என்ற தொழிலாளி உடல் கருகி இறந்துபோனார்.
படுகாயமுற்ற நிலையில் அங்கிருந்து மீட்கப்பட்ட சின்ன முனியாண்டி, சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 2020 தொடக்கத்தில் இருந்து விதிமீறலால் பட்டாசு ஆலைகள் விபத்துக்குள்ளாவதும், உயிர் பலிகள் ஏற்படுவதுதொடர்வதும் வேதனை அளிப்பதாக உள்ளது.