Skip to main content

சிவாஜி கணேசன் சிலை அகற்றம் - மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 05/08/2017 | Edited on 05/08/2017
சிவாஜி கணேசன் சிலை அகற்றம் - மு.க.ஸ்டாலின் கண்டனம்

திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் அளித்த பேட்டியில், 

சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்டது குறித்து தி.மு.க. கருத்து என்ன? திமுக தலைவர் கருணாநிதியால் வைக்கப்பட்ட சிலை அது. அதனால் அரசியல் காழ்ப் புணர்வோடு, அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அந்த சிலையை அங்கிருந்து எப்படியாவது அகற்றிட வேண்டும் என்று திட்டமிட்டு சதி செய்து அந்த முயற்சியில் ஈடுபட்டு வந்தார்கள். நியாயமாக, இன்றைக்கு இருக்கக்கூடிய அரசு நீதிமன்றத்தில் முறையாக வாதாடி நிச்சயமாக சிலையை அகற்ற முடியாத நிலையை உருவாக்கியிருக்க முடியும். ஆனால், வேண்டுமென்றே திட்டமிட்டு, நடிகர் சிவாஜி கணேசன் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவருடைய சிலை அகற்றப்பட்டிருக்கிறது என்பதுதான் எங்களுடைய கருத்து. இவ்வாறு கூறினார்.

சார்ந்த செய்திகள்