கடந்த மாதம் 29-ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், சில இடங்களில் ரயில்வே திட்டங்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக மதுரை எம்.பி. சு.வேங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ''பல்வேறு ரயில் திட்டங்களுக்கு தலா வெறும் 1000 ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டும் இதேபோல் பல திட்டங்களுக்கு வெறும் 1000 ரூபாய் ஒதுக்கியதை நான் கண்டித்தேன்'' என்றார்.
தமிழகத்தில் ரயில் வளர்ச்சி திட்டங்களுக்கு 11 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில், வெறும் 95 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிலும் காட்பாடி - விழுப்புரம் உள்ளிட்ட இரட்டை ரயில் திட்டங்களுக்கும் வெறும் 1000 ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.