தமிழகம் முழுவதும் தைப்பூசத் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. கரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் தமிழகம் முழுவதும் கடந்த 5 நாட்களாக கோயில்கள் மூடப்பட்டிருந்தன. இதனால் தைப்பூச விழாவை வீடுகளில் மக்கள் கொண்டாடும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், இன்று காலை முதல் கோயில்கள் வழக்கம்போல் திறக்கப்பட்டதால் மக்கள் முருகன் கோயில்களுக்குச் சென்று வழிபட்டு வருகிறார்கள். இதனால் காலை முதலே தமிழகத்தில் புகழ்பெற்ற திருத்தணி, திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட கோயில்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
இந்நிலையில் தைப்பூசத்தை முன்னிட்டு ஜெயலலிதாவின் தோழி சசிகலா காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுப்ரமணி சாமி கோயிலுக்கு வெள்ளிக்கவச உடையை நன்கொடையாக வழங்கியுள்ளார். இதன் மதிப்பு சுமார் 25 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.