Skip to main content

தடை செய்யப்பட்ட போதைப் பொருள்; கடை உரிமையாளர் கைது

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

 

Shop owner arrested for selling cannabis

 

தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த பேக்கரி கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள், கடை உரிமையாளரை கைது செய்து 13 கிலோ குட்கா பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள பெரிய வேட்டுவபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவர் பெருந்துறை சிப்காட் வளாகத்தின் அருகில் பேக்கரி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

 

அந்தத் தகவலின் பேரில், பெருந்துறை காவல்துறை ஆய்வாளர் மசுதா பேகம் உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர் பாஸ்கரன் உதவியுடன், சம்பந்தப்பட்ட கடைக்குள் அதிரடியாக நுழைந்து அதிகாரிகள் நடத்திய சோதனையில், ஹான்ஸ், பான்பராக் போன்ற குட்கா பொருட்கள் மறைத்து வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கடையின் உரிமையாளரான ரவி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த அதிகாரிகள், 13 கிலோ குட்காவை பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்