கடலூர் பண்ருட்டியில் பரபரப்பான சாலையில் டிப்பர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கார் மற்றும் இருசக்கர வாகனத்தை இழுத்துச்சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு 9 மணியளவில் சென்னையிலிருந்து நெய்வேலி நோக்கி வந்த டிப்பர் லாரி ஒன்று பண்ருட்டி நான்குமுனை மேம்பாலம் அருகே கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நடந்து சென்ற ஒருவர் மீதும் அந்த டிப்பர் மோதியதில் அவர் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து அங்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த விபத்து குறித்து பண்ருட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அந்த விபத்து நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மூலம் விபத்து காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள அந்த சிசிடிவி காட்சியில், அந்த சாலையில் பணியில் ஈடுப்பட்டிருந்த போக்குவரத்து காவலர் டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சீறி வருவதைக்கண்டு அதிர்ச்சியுடன் லாரியை நிறுத்த சமிக்கை காட்ட நிற்காத லாரி காரை முன்பக்கம் மோதியபடி இழுத்து செல்வது பதிவாகியுள்ளது.