நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையத்தில் சிவன் கோவில் திருவிழாவில் கலைநிகழ்ச்சி என்ற பெயரில் மதுபான பார்களில் நடனமாடும் அழகிகளை வைத்து ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் கனா பாய்ஸ் என்ற நடன கலைநிகழ்ச்சி குழு ஒன்றை வைத்துக் கொண்டு கோவில் திருவிழாக்களில் பாரம்பரிய கலைநிகழ்ச்சி நடத்துவதாக கூறி நீதிமன்றத்தில் ஒப்புதல் ஆணைபெற்று மது பார்களில் நடனமாடும் அழகிகளை வைத்து ஆபாச நடன நிகழ்ச்சிகளை செய்து லச்சக்கணக்கில் சம்பாரித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி நாமக்கல் வையப்பன் மலை அடிவாரத்தில் உள்ள சிவன் கோவில் விழாவில் நடைபெற்ற திருவிழாவில் பிரகாஷ் நடத்திய கலைநிகழ்ச்சி அங்கு கூடியிருந்த பெண்கள் முகம் சுளிக்கும் வகையில் இருந்ததாகவும் மிகவும் ஆபாசமாகவும் இருந்ததாக குற்றசாட்டு எழ நடன கலைஞர்களின் தலைவர் அஜித் ராஜா பிரகாஷை தொலைபேசியில் தொடர்புகொண்டு இது சம்பந்தமாக விளக்கம் கேட்டுள்ளார். நீ இதே மாதிரிதான் பண்ணிக்கிட்டு இருப்பியா, இதுபோல ஆடும் அவர்களை ஏதவாது செய்துவிட்டால் யார் பொறுப்பு என எச்சரித்துள்ளார். ஆனால் அவர் கேட்க்கும் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் போனை கட் செய்துள்ளார் பிரகாஷ்.
ஆனால் அடுத்த சிலநாட்களிலேயே பிரகாஷின் நட்புவட்டாரத்தில் உள்ள சிலர் அஜித்ராஜாவை தொலைபேசியில் மிரட்டியுள்ளனர்.
இதனையடுத்து நடன கலைஞர்கள் சங்க தலைவர் அஜித்ராஜா எலச்சிபாளையம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இது பற்றி அஜித்ராஜா கூறுகையில், சம்பந்தப்பட்ட நபரான பிரகாஷ் பெங்களூர் மற்றும் மும்பையில் பாரில் நடனமாடும் பெண்களை இங்கே கூட்டிவந்து அறையெடுத்து தங்கவைத்து ஆபாச நடன நிகழ்ச்சிகளை நடத்துவதையே தொழிலாக செய்துவருகின்றார். பொள்ளாச்சி வழக்கில் கூட பிரகாசுக்கு தொடர்பிருப்பதாக சந்தகேமும் எங்களுக்கு உள்ளது எனக்கூறினார்.
இதுபோன்ற ஆபாச நிகழ்ச்சிகளே பாலியல் குற்றங்களுக்கு முதல் காரணமாகும், இதுபோன்ற நிகழ்ச்சிகள்தான் பாலியல் குற்றங்கள் நடைபெற உந்துதலாக இருக்கிறது. ஆனாலும் இன்று வரை தென் மாவட்டங்களில் இதுபோன்ற ஆபாச நடனங்கள் தடை செய்யப்பட்டாலும் அதையும் மீறி சிலர் இதை தொழிலாக செய்துதான் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.