திருவண்ணாமலை மாவட்டம், வாழவச்சனூரில் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்கு சென்னையை சேர்ந்த ஒரு மாணவி இரண்டாம் ஆண்டு படிக்கிறார். அங்கு பணியாற்றும் பேராசிரியர் ஒருவர் கடந்த 7 மாதங்களாக மாணவி தங்கி படிக்கும் விடுதிக்கு சென்று அவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகின்றது. இதற்கு விடுதி காப்பாளர்களாக உள்ள இரண்டு பெண் பேராசியர்கள் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க சொல்லியும் செல்போனில் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகின்றது.
இது குறித்து கல்லூரி மாணவி தனது பொற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து பெற்றோர்கள் தனது மகளுக்கு நியாயம் வேண்டும் என்று ஆகஸ்ட் 21 ந்தேதி மதியம் 1 மணியளவில் 50 க்கும் மேற்பட்டவர்களுடன் கல்லூரிக்கு சென்று முதல்வரிடம் நியாயம் கேட்டுள்ளனர். அவர் சரியாக பதில் கூறாததால் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மற்றும் விடுதி காப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாழவச்சனூர் பொதுமக்களிடம் கூறினர். இதனையடுத்து பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கல்லூரிக்குள் சென்று கல்லூரி முதல்வரிடமும் பேராசிரியர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்கள்.
இந்த தகவல் போலிஸ்க்கு சென்றது. போலீஸ் துணை சூப்பிரண்டு பழனி தலைமையில் போலிஸாரும், வருவாய்த்துறையினரும் பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் பெற்றோர்களிடம்பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மாணவிகளின் பெற்றோர்கள் எனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரிர் மீதும் அதற்கு துணையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது. துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உத்திரவாதம் அளிக்க புகார் தந்துள்ளனர்.
இந்நிலையில் மாவட்ட நீதிபதி தன்னிச்சையாக இந்த புகாரை கையில் எடுத்து பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்திவருகிறார்.