Skip to main content

செப்.15ல் நாடாளுமன்றத்தை நோக்கி வங்கி ஊழியர்கள் பேரணி!

Published on 10/09/2017 | Edited on 10/09/2017

செப்.15ல் நாடாளுமன்றத்தை நோக்கி 
வங்கி ஊழியர்கள் பேரணி!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதிலும் இருந்து இலட்சக்கணக்கான ஊழியர்கள்  நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல இருப்பதாக கோவையில் அகில இந்திய விஜயா வங்கி ஊழியர்கள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

கோவையில், விஜயா வங்கி ஊழியர் சங்க மண்டல மாநாடு,நடைபெற்றது. மாநாட்டை துவக்கி வைத்து பேசிய,அகில இந்திய விஜயா வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சீனிவாசன், மத்திய அரசின் பல்வேறு புதிய பொருளாதார நடவடிக்கைகள் அடிப்படையில் மேற்கொள்ளப்படும், அரசின் நிதிக்கொள்கையால், வங்கித் துறை பெரிய அளவில், நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இப்பிரச்னைகள் குறித்து, வங்கி ஊழியர்கள் சங்கம், பேச்சுவார்த்தை மூலமும், பல போராட்டங்கள் மூலமும், அரசை வலியுறுத்தியும் கேட்காமல், தொடர்ந்து ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம், வரும் செப்டம்பர் 15 ந்தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தை நோக்கி மாபெரும் பேரணி நடைபெற உள்ளதாகவும்,இதில் நாடு முழுவதிலும் இருந்து இலட்சக்கணக்கான வங்கி ஊழியர்கள் இதில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.

- அருள்

சார்ந்த செய்திகள்