இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு அய்யா சென்னை தியாகராய நகரிலுள்ள அரசு குடியிருப்பு வாடகை வீட்டில் கடந்த 12 ஆண்டுகளாக வசித்து வந்தார். இந்தநிலையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ள இடத்தில் புதிய திட்டம் வருவதால் குடியிருப்பு வாசிகள் அனைவருக்கும் நோட்டீஸ் தரப்பட்டது. இதனால் அவர் அந்த வீட்டைவிட்டு கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியேறி, கே.கே. நகரில் குடியேறினார்.
![nallakannu](http://image.nakkheeran.in/cdn/farfuture/xivTG6Nqb_AUw39JQ4VAYGrqN3KJLxTH6Ek1wUUqMT0/1581780900/sites/default/files/inline-images/asdsdssds%20%281%29.jpg)
அந்த குடியிருப்பு வீடு அரசு, அவருக்கு இலவசமாக வழங்கியது. எதையும் இலவசமாக பெற்றுக்கொள்ள விரும்பாத நல்லக்கண்ணு, இது என் கொள்கைக்கு விரோதமானது எனக்கூறி அந்த வீட்டிற்கு வாடகை கொடுத்துதான் தங்கி வந்தார். ஆனால் வெளியேறும்படி அவருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவருக்கு அரசு சார்பில் வீடு வழங்கக் கோரியும் அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வலியுறுத்தி வந்தனர்.
இந்த விவகாரத்தையே அனைவரும் மறந்த நிலையில், தற்போது நந்தனம் அருகே பொதுஒதுக்கீட்டில் வாழ்நாள் முழுவதும் வாடைகையின்றி வசிப்பதற்கு நல்லகண்ணு அய்யாவிற்கு வீடு கொடுப்பதற்கான அரசாணையை அரசு பிறப்பித்துள்ளது. ஹவுசிங்போர்ட் தயாரானவுடன் வீட்டிற்கான சாவி வழங்கப்படும் என்ற நிலையில் தற்போது இதற்கான அரசாணையை பிறப்பித்துள்ளது அரசு.