Skip to main content

அப்ரிவேஷன் கேட்ட செல்வப்பெருந்தகை; தெரியாமல் விழித்த அதிகாரி

Published on 31/08/2024 | Edited on 31/08/2024
Selvaperundagai asked for abbrevation; Unknowingly awake officer

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையிலான சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் திருப்பத்தூரில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் அங்கு வந்திருந்தார். அப்போது செல்வப்பெருந்தகையிடம் 'ஒண்ணுமே இல்லாத திருப்பத்தூருக்கு எதுக்கு வந்தீங்க' என சிரித்தபடியே கேட்டார். தொடர்ந்து திருப்பத்தூரில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் இயங்கும் அரசினர் மாணவியர் விடுதியில் செல்லப்பெருந்தகை ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு மாணவிகளுக்காக தயாரித்து வைக்கப்பட்டிருந்த ரசத்தை ஒரு டம்ளரில் எடுத்து குடித்து சுவைத்துப் பார்த்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலும் செல்லப்பெருந்தகை தலைமையில் ஆய்வு நடைபெற்றது. அப்பொழுது அங்கு ஏஆர்டி சென்டர் எழுதப்பட்டிருந்த கட்டட பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்தினார். அங்கிருந்த அதிகாரி ஒருவரிடம் ஏஆர்டி என்றால் என்ன? அதற்கு அப்ரிவேஷன் சொல்லுங்க என கேட்டார். ஆனால் மருத்துவமனை இணை இயக்குநர் கண்ணகியோ ஏஆர்டிக்கு அப்ரிவேஷன் தெரியாமல் விழித்தார். பின்னர் அங்கிருந்தவர்கள் விளக்கம் சொல்ல முயன்றனர்.

சார்ந்த செய்திகள்