எதிர்க்கட்சித்தலைவர் அவசரப்பட்டு பேசக்கூடியவர். எதையுமே சிந்தித்து பேசக்கூடியவர் அல்ல. நம்ம மதுரை என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சி சார்பில் "நம்ம மதுரை" என்ற நிகழ்ச்சி இரண்டாவது நாளாக மதுரை தெப்பக்குளம் பகுதியில் இன்று காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார் . மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் , துணை ஆணையர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிக்காட்டக் கூடிய சிலம்பாட்டம், பொய்க்கால் ஆட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு,
மத்திய பட்ஜெட்டில் சிறப்பான நிதிநிலை அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விவசாயி, ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்ககூடியது வகையில் அமைந்துள்ளது. எடுத்தவுடன் பட்ஜெட் பற்றி ஸ்டாலின் குறை கூறுகிறார். இனிமேல்தான் பட்ஜெட் குறித்து தெரியும்.
எதிர்க்கட்சித்தலைவர் அவசரப்பட்டு பேசக்கூடியவர். எதையுமே சிந்தித்து பேசக்கூடியவர் அல்ல என்றுதெரிவித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, அவரிடம் இருந்து என்ன வரனுமோ அந்த கருத்து தான் வந்துள்ளது என தெரிவித்தார். பட்ஜெட் குறித்த கமலஹாசனின் கருத்துக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் இந்தியன் 2 வில் நடித்துவிட்டு போய்விடுவார். இடை இடையே குரல் கொடுப்பார். இதயையே வாடிக்கையாக பழக்கமாக வைத்துள்ளார் கமலஹாசன். நடிகர் என்ற இமேஜ்க்காக கருத்து சொல்கின்றனர். படித்து பார்த்து கமலஹாசன் கருத்து சொல்ல வேண்டும். பட்ஜெட் எடுத்தவுடன் தாக்கல் செய்யப்படாது. விவாதம் செய்யப்பட வேண்டும். நாடளுமன்றத்தில் பட்ஜெட் குறித்து விவாதம் நடக்கும் போது திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து பேச வேண்டியதை கவனித்து ஸ்டாலின் பேச வேண்டும் என தெரிவித்தார்.