
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடங்கியுள்ள 33 பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படவிருப்பதாக அரசு அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
மக்கள் தொகை அதிகரிப்பதன் அடிப்படையில் பேரூராட்சிகளை நகராட்சிகளாக அவ்வப்போது தரம் உயர்த்தி வருகிறது தமிழக அரசு. 30 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட பேரூராட்சிகள் நகராட்சிகளாக பதவி உயர்வு பெறும்.
அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள குன்றத்தூர், மாங்காடு, செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம், கூடுவாஞ்சேரி, திருநீர்மலை, சிட்லப்பாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், திருவள்ளூரில் பொன்னேரி, கடலூர் மாவட்டத்தில் வடலூர், தஞ்சையில் அதிராம்பட்டினம், தேனியில் உத்தமபாளையம், தூத்துக்குடியில் திருச்செந்தூர், ராணிபேட்டை மாவட்டத்தில் சோழிங்கர், விழுப்புரம் மாவட்டத்தில் கோட்டக்குப்பம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர், சேலம் மாவட்டத்தில் சங்ககிரி, தாரமங்கலம், இடங்கனசாலை, கரூரில் பள்ளப்பட்டி, திருப்பூரில் அவினாசி, கோவையில் காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை , நீலகிரியில் கோத்தகிரி, நெல்லையில் களக்காடு, பணங்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் கொள்ளங்கோடு உள்ளிட்ட பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்த அரசு தரப்பில் முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம்.