Published on 29/09/2020 | Edited on 29/09/2020
தொழிலதிபர் சேகர்ரெட்டி வீட்டிலிருந்து ரூபாய் 34 கோடிக்கு புதிய ரூபாய் 2 ஆயிரம் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்ட வழக்கை முடித்து வைத்தது சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம்.
இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சேகர்ரெட்டி வழக்கை முடித்துவைத்து அ.தி.மு.க.வுக்கு பா.ஜ.க. அன்பு பரிசு அளித்தது அதிர்ச்சியளிக்கிறது. ஈ.பி.எஸ்- ஓ.பி.எஸ் தலைமையிலான இந்த அரசை பிரதமர் நரேந்திர மோடி காப்பாற்றுவது ஏன்?, அ.தி.மு.க. அரசை காப்பதும், சி.பி.ஐ. போன்ற அமைப்புகளில் நடவடிக்கைகளை பிசுபிசுக்க வைப்பதும் ஏன்?
ரூபாய் 2000 நோட்டுகள் சேகர் ரெட்டிக்கு எந்த வங்கியிலிருந்து கொடுக்கப்பட்டது என்பதை சி.பி.ஐ. கண்டுபிடிக்கவில்லை. திருப்பூர் கண்டெய்னரில் பணம் கைப்பற்றப்பட்ட வழக்கையும் சி.பி.ஐ. அம்போவென கைவிட்டது" என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.