



Published on 26/04/2019 | Edited on 26/04/2019
இலங்கையில் தொடர் வெடிகுண்டு சம்பவம் காரணமாக சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஸ்ட்ரோம் ஆபரேஷ்ன் என்ற பெயரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு ரயில் பயணிகளிடம் சோதனை செய்யப்பட்டது. இதில் தமிழக போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். பயணிகளின் உடமைகள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகிறது.