இரண்டாவது ரிக் இயந்திரத்தை பொருத்துவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. இரண்டாவது இயந்திரத்தின் பில்லர் அமைக்கக்கூடிய பணிகள் என்பது நடந்துகொண்டிருக்கிறது. இந்த பகுதி குறிப்பாக மிகவும் இறுக்கமான பாறைகள் கொண்ட பகுதியாக இருக்கிறது. கடினப் பாறைகள், நீர் புகா பாறைகள். இந்த பாறைகளை உடைத்து எடுப்பதில் மிகுந்த சிரமம் இருக்கிறது.
தற்போது 35 அடி ஆழத்திற்கு ரிக் இயந்திரம் துளையைபோட்டிருக்கிறது. மீதி இருக்கின்ற பணியை புதிதாக வந்திருக்கின்ற ரிக் இயந்திரம் மேற்கொள்ளும். இந்த இயந்திரம் தற்போது இயங்கி வரும் இயந்திரத்தை விட மூன்று மடங்கு சக்தி வாய்ந்த இயந்திரம். குழந்தையை விரைந்து மீட்க வேண்டுமெனில் தற்போது வந்துள்ள இரண்டாவது ரிக் இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும் என்ற சூழல் நிலை தற்போது அங்கே உருவாகியுள்ளது.
இன்னும் இரண்டு மணி நேரத்தில் அதிசக்திவாய்ந்த அந்த இயந்திரம் பொருத்தப்பட்டு தனது பணியை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு அதிகாரிகள் மூன்று நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகளோடு நேற்று மாலை ஒரு கலந்தாலோசனை கூட்டம் நடத்தினார்கள். அமைச்சர்களும், அதிகாரிகளும் பங்கேற்ற அந்த கூட்டத்தில் என்எல்சி மற்றும் ஓஎன்ஜிசி நிர்வாகம் மற்றும் அதனை சேர்ந்த அதிகாரிகள் திட்டமிட்ட அடிப்படையில்தான் தற்போது இந்த குழிதோண்டும் பணியானது நடைபெற்றுவருகிறது.
ஒரு மீட்டர் சுற்றளவு உள்ள குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஓஎன்ஜிசி ஒப்பந்த தொழிலாளராக இருக்கக்கூடிய பல்வேறு போர்வெல் பணிகளில் ஈடுபடுத்த கூடிய தொழிலாளர்கள் உள்ளே இறக்கப்பட இருக்கிறார்கள். அவர்கள் தான் அந்த குழியில் பக்கவாட்டு துளை அமைக்கும் பணியில் ஈடுபட இருக்கிறார்கள். அதற்குப் பின்னால் மேல்நோக்கி துளையிட்டு பேரிடர் மீட்பு பணி வீரர்கள் குழந்தையை மீட்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
குறிப்பாக இங்கு வந்துள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும், மாநில பேரிடர் மீட்பு குழுவினரும் தற்போதுவரை இங்கேயே தொடர்ந்து இவர்களுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை செய்து வருகின்றனர். திருச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மணப்பாறையில் இருக்கிறது. அதனுடைய தலைமை மருத்துவர் இன்று காலை கூறுகையில், குழந்தை உயிரோடு இருக்கிறது என்பதற்கான அறிவிப்பை வெளியிட்டார். குறிப்பாக அந்த குழந்தையினுடைய உடல் வெப்ப நிலையிலிருந்து குழந்தை உயிரோடு இருக்கிறது என்பதை நாங்கள் கண்டறிந்தோம் என்ற தகவலையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார். குழந்தை சுயநினைவை இழந்து இருந்தாலும், 75 மணி நேரம் சுய நினைவு இல்லாமல் இருந்தாலும்கூட மீட்டெடுத்துவிட்டால் குழந்தையை காப்பாற்றி விடுவதற்கான அனைத்து மருத்துவ வசதிகளும் இங்கு இருக்கக்கூடிய 108 ஆம்புலன்சில் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது.
அதன் அடிப்படையில் ஒரு மருத்துவமனையில் குழந்தையை காப்பாற்றுவதற்கு என்னென்ன வசதிகள் இருக்குமோ அத்தனையும் இங்கே ஐந்து அன்புலன்சில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த குழிதோண்டும் பணியானது 13 மணி நேரத்தைத் தாண்டி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.