தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (09/10/2021) காலை 07.00 மணிக்குத் தொடங்கிய நிலையில் தற்பொழுது நிறைவடைந்தது. 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும், 626 ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கும், 1,324 கிராம ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது. அதேபோல், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் தற்பொழுது நிறைவடைந்து.
இரண்டு கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் அக்.12 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் 6 மணிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இந்நிலையில் டோக்கன் பெற்ற வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்களது வாக்குகளைச் செலுத்தி வருகின்றனர். முதல்கட்டமாக 39 ஒன்றியங்களில் நடைபெற்ற வாக்குபதிவில் 77.43 சதவிகிதம் வாக்குப் பதிவானது குறிப்பிடத்தக்கது.