Published on 28/11/2020 | Edited on 28/11/2020
"தென் கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தமிழக கடற்கரையை நோக்கி வரும். காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாறினால் மாலத்தீவு வழங்கிய 'புரெவி' பெயர் வைக்கப்படும்" இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.