Skip to main content

'பள்ளியில் தொடரும் அரிவாள் கலாச்சாரம்'-நெல்லையில் மீண்டும் பரபரப்பு 

Published on 11/09/2024 | Edited on 11/09/2024
'Scythe culture continues in school'-resurgence in Nellai

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் ஏற்கனவே பள்ளி மாணவன் ஒருவரை வீடு தேடிபோய் சக மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து அண்மையிலும் நாங்குநேரியில் ஒரு பள்ளியில் தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரை மேலே சிந்திய மாணவனை சக பள்ளி மாணவன் அரிவாளால் வெட்டியது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

தொடர்ந்து நெல்லையில் பள்ளி மாணவர்களிடையே அரிவாள் கலாச்சாரம் என்பது அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் அதிர்ச்சி தரும் ஒரு விதமாக நெல்லையில் அரசு உதவி பெறும் பள்ளிக்கு மாணவர் ஒருவர் அரிவாளுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்று வரும் மாணவன், சக மாணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மாணவனை மிரட்டுவதற்கு அரிவாளை புத்தகப் பையில் வைத்து எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஆசிரியருக்கு தகவல் தெரிந்தவுடன் சம்பந்தப்பட்ட மாணவனின் புத்தகப் பையை சோதனை இட்டுள்ளனர். அப்போது பையில் அரிவாள இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டு மாணவர்களையும் போலீசார் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர்.பள்ளிக்கு மாணவன் அரிவாளுடன் வந்தது நெல்லையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்