கரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் பல நாட்களாக மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் நீண்ட நாட்களாக பள்ளிக்குச் செல்லமுடியாமல், ஆன்லைன் வகுப்புகளில் பாடங்களைப் படித்து வருகிறார்கள். தற்போது கரோனா பரவல் குறைந்து வருவதால் செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்திருந்தது.
இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் முதல்வர் நேற்று ஆலோசனை நடத்தியிருந்தார். அதைத்தொடர்ந்து தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் பள்ளி திறப்பு, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். சில மாநிலங்களில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் பள்ளி திறப்பு மீண்டும் திள்ளி வைக்கப்படுமோ என்று மாணவர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்திருந்த நிலையில், நாளை தமிழகம் முழுவதும் பள்ளி திறக்கப்படுவதில் எந்த மாற்றமும் இல்லை என்று தமிழக அரசு தெளிவுப்படுத்தியுள்ளது.