பள்ளி வேன் மற்றும் பணம் கடத்தல்: இரு சிறுவர் உட்பட மூவர் கைது!
ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், அம்மாபேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையத்தில் சித்தாறு என்ற ஊரை சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகன் விக்னேஷ் (வயது-23), நெரிஞ்சிப்பேட்டை காலனியைச் சேர்ந்த 15 வயது சிறுவர்கள் இருவர் பணியாற்றி வந்தனர்.
இந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தில், ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் உள்ள பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பேருந்துகள் இரவு நேரத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம்.
நேற்று காலை விக்னேஷ் மற்றும் அவருடன் பணியாற்றும் சிறுவர்கள் இருவரும் சேர்ந்து விற்பனை நிலையத்தில் வைக்கபட்டிருந்த பணம் ரூ.23 ஆயிரத்தையும், வெளியில் பாதுகாப்புக்காக நிருத்தப்பட்டிருந்த தனியார் பள்ளி வேனையும் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டான்ர்.
இதையறிந்த பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளர் சங்கர் என்பவர் அளித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அந்த வேன் மேட்டூர் நோக்கி சென்று கொண்டிருப்பதாக அந்தப்பக்கம் இருந்து வந்தவர்கள் போலீசாரிடம் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, அம்மாபேட்டை போலீசார், மேட்டூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, மேட்டூர் போலீசார், பவாநிளியில் இருந்து வரும் வாகனங்களை நால்ரோடு என்ற இடத்தில் நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது, அவ்வழியாக பள்ளி வேனில் வந்த விக்னேஷ் மற்றும் சிறுவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து வேன் மற்றும் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்தனர்.