இந்தியாவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்திலும் பெரிய அளவில் உள்ளது. தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3- ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
இதற்கிடையில் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், ஊரடங்கு காலத்தைப் பயனுள்ளதாக மாற்றவும் திருவண்ணமாலை மாவட்ட ஆட்சியர் சிறப்பு ஆன்லைன் தேர்வு என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் 6- ஆம் வகுப்பு முதல் 10- ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்குச் சிறப்பு ஆன்லைன் தேர்வு 3 கட்டமாக நடத்தப்படும் என்றும், அந்தத் தேர்வை 'http://tiruvannamalai.nic' என்ற தளத்தில் 'student online test' என்ற இணைப்பைக் கிளிக்செய்து பங்கேற்கலாம் என்றும் அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.