கோவையில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை வந்துள்ள என்.ஐ.ஏ. அமைப்பின் இயக்குநர் திங்கர் குப்தா, தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவை நேற்று சந்தித்த நிலையில், தமிழக கவர்னர் ரவியை சந்தித்தும் ஆலோசித்தார்.
தமிழகத்தில் சமீபத்தில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தியதை மையமாக வைத்து இந்தச் சந்திப்பு நடந்தது. அந்த ஆலோசனையில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு, கடலோரப் பாதுகாப்பு உள்ளிட்ட பல விசயங்கள் பேசப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இன்று 11:30-மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார் என்.ஐ.ஏ. இயக்குநர். அதே விமானத்தில் பாஜக அண்ணாமலையும் டெல்லி செல்கிறார் எனச் சொல்லப்படுகிறது. அரசியல்ரீதியாக இந்தப் பயணம் உற்றுக் கவனிக்கப்படுகிறது. குறிப்பாக, மாநில உளவுத்துறை இதைக் கவனித்து வருவதாகச் சொல்லப்படுகிறது.