Published on 06/07/2022 | Edited on 06/07/2022

தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் பிரியா ஆனந்த். இவர் அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியிருந்த சில கருத்துக்கள் வைரலாகி வருகிறது.
மாதத்திற்கு இரண்டு முறையாவது அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் நித்தியானந்தா குறித்து பதிவிட்டு வரும் பிரியா ஆனந்த், யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் 'நித்தியானந்தாவை எனக்கு மிகவும் பிடிக்கும். நித்தியானந்தாவை கல்யாணம் செய்தால் பிரியா ஆனந்த் என்ற தன்னுடைய பெயரைக்கூட மாற்ற வேண்டிய தேவை இருக்காது. எப்படியாவது யாராவது வதந்திகளைப் பரவ செய்வதால் நானும் சந்தோஷமாக இருப்பேன். அவருக்கு எல்லோரையும் சுலபமாக ஈர்க்கத் தெரியும். நித்தியானந்தாவை இத்தனை பேர் பின் தொடருகிறார்கள் என்றால் அவரிடம் ஏதோ ஒன்று இருக்கிறது என்றுதான் அர்த்தம்'' என்று தெரிவித்துள்ளார்.