Skip to main content

திருநெல்வேலியில் பள்ளி விபத்து- தாளாளர் உட்பட மூன்று பேர் கைது!

Published on 17/12/2021 | Edited on 17/12/2021

 

school incident students police investigation

 

திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி மாநகரில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், இப்பள்ளியில் இன்று (17/12/2021) காலை 10.50 மணியளவில், பள்ளியில் உள்ள கழிவறைத் தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி டி.விஸ்வரஞ்சன், கே.அன்பழகன் மற்றும் ஆர்.சுதீஸ் ஆகிய மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 

 

மேலும், எம்.இசக்கி பிரகாஷ், எஸ்.சஞ்சய், ஷேக்கு அபுபக்கர் கித்தானி மற்றும் அப்துல்லா உள்ளிட்ட நான்கு மாணவர்கள் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 

இந்த நிலையில், உயிரிழந்த மூன்று மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், "சாஃப்டர் பள்ளியின் தாளாளர் சாலமன் செல்வராஜ், தலைமை ஆசிரியை ஞானசெல்வி, கட்டட ஒப்பந்ததாரர் ஆகிய மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மற்றவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது"  என்றார்.

 

சார்ந்த செய்திகள்