கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கொத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட சரஸ்வதிஅம்மாள் நகரிலுள்ள 3 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி குழந்தைகள் கேரளா மாநிலத்தின் வெள்ளபாதிப்பை தொலைகாட்சி மூலம் தெரிந்து கொண்டு அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தினமும் பள்ளி முடிந்து மாலை நேரத்தில் சஸ்வதி அம்மாள் நகர், கதிர்வேல் நகர், ஆஸ்வா நகர் உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று கேரளாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கூறி ரூ 3800 நிதி திரட்டியுள்ளனர். திரட்டிய நிதியை அவர்களே திங்கள் மாலை சிதம்பரம் எஸ்பிஐ தானியங்கி வங்கியில் கேரளா மாநில முதல்வர் நிவாரண நிதி கணக்கில் செலுத்தியுள்ளனர். நிதி அனுப்பியது குறித்து கேரளா முதல்வர் பிரனாய்விஜயனுக்கும் கடிதமும் எழுதியுள்ளனர். இதனை அறிந்த பலர் பள்ளி குழந்தைகளை பாராட்டி வருகிறார்கள்.