
சத்தியசீலன், பெரம்பலூர் மாவட்டத்தில் 1933ஆம் ஆண்டு பிறந்தவர். ‘சொல்லின் செல்வர்’ என்ற பெயருக்கு சொந்தகாரர் சோ. சத்தியசீலன் (89), வயது முதிர்வு காரணமாக வெள்ளிக்கிழமை (09.07.2021) நள்ளிரவு காலமானார்.
பள்ளி ஆசிரியராக தன்னுடைய கல்விப் பணியைத் துவங்கிய அவர், சென்னைப் பல்கலைக்கழகத்தில் வள்ளலார் குறித்த ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றார். பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர், திருச்சி தேசியக் கல்லூரியில் பயின்று, அதே கல்லூரியில் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். பன்முகத் தன்மையோடு விளங்கியவர் சத்தியசீலன் என்பதற்கு அவர் பல பரிமாணங்களில் பணியாற்றிய சுவடுகள் எப்போதும் நினைவில் இருக்க கூடியவை.
பட்டிமன்ற பேச்சாளர், சொற்பொழிவாளர், வர்ணணையாளர், தொகுப்பாளர் வானொலி, தொலைக்காட்சி மற்றும் பல்லாயிரக்கணக்கான பட்டிமன்ற மேடைகளில் பேசியவர்.
அமெரிக்கா, கனடா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், குவைத், பாரீஸ், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் சென்று தமிழ் பணியாற்றியவர். இவரது இறுதிச்சடங்கு இன்று (10.07.21) பிற்பகல் திருச்சி சேதுராமன் பிள்ளை காலனியில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்றது.