ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் மற்றும் சூலூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தயாரென தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி இதனை தெரிவித்தார், ஒட்டப்பிடாரம் தொகுதி தொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தொடர்ந்திருந்த வழக்கை திரும்ப பெற்றார். அதேசமயம் திருப்பரங்குன்றம் தொகுதியில் நின்ற ஏ.கே. போஸின் வெற்றியும் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. மேலும் சூலூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த கனகராஜ் காலமானதால் அந்த தொகுதியும் காலி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மூன்று தொகுதிக்கும் தேர்தல் நடத்த தயாரென தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். ஆனால் இறுதி முடிவு இந்திய தேர்தல் ஆணையமே எடுக்குமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.