சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் கடுமையாக இருப்பதாக விக்டோரியா அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சசிகலாவுக்கு கரோனா பாதிப்பு உறுதியான நிலையில், பெங்களூருவில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சசிகலாவின் உடல்நிலை குறித்து விக்டோரியா அரசு மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் கடுமையாக இருக்கிறது. சசிகலா அதிதீவிர நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். நுரையீரலில் சளி அதிகமாக இருக்கும் நிலையில், ஆக்ஸிஜன் அளவு 95 என்ற அளவில் உள்ளது. நேற்று (21.01.2021) மாலை 98 ஆக இருந்த நிலையில் இன்று ஆக்ஸிஜன் அளவு 95 ஆக இருக்கிறது. அவரின் உடல்நிலை தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது. ரத்த அழுத்தம், நீரிழிவு, தைராய்டு போன்ற பிரச்சனைகளும் சசிகலாவுக்கு உள்ளன'. இவ்வாறு மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.