Published on 13/05/2019 | Edited on 13/05/2019
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா, ஜெ.ஜெ.தொலைக்காட்சிக்கு உபகரணங்கள் வாங்கியது தொடர்பான அந்நிய செலாவணி மோசடி வழக்கில் காணொளி காட்சி மூலம் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
எழும்பூர் நீதிமன்றத்தில் போதிய வசதிகள் இல்லாததால் இன்று அவர் காணொளி காட்சி மூலம் ஆஜராகவில்லை. ஆகவே, மே28ம் தேதி சசிகலாவை காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்த வேண்டும் என்று சிறை நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.