சில தினங்களுக்கு முன்பு உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இனி பிராந்திய மொழிகளில் வெளியாகும் என்று உச்சிநீதிமன்ற பதிவாளர் அறிவித்திருந்தார். அதில் தீர்ப்பு வெளியாகும் மாநில மொழிகளாக தெலுங்கு, வங்காளம் உள்ளிட்ட சில மொழிகள் இடம் பெற்றிருந்தாலும் தமிழ் மட்டும் அந்த மொழி் பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழ் ஆர்வலர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக அரசியல் கட்சிகளும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை தமிழிலும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், தமிழ் உள்ளிட்ட 9 பிராந்திய மொழிகளில் 1oo-க்கும் மேற்பட்ட வழக்குகளின் தீர்ப்புக்கள் உச்சநீதிமன்ற இணையதளத்தில் தற்போது வெளியாகி உள்ளது.
உச்சநீதிமன்றத்தில் தமிழில் வெளியான முதல் தீர்ப்பு என்பது சரவண பவன் அண்ணாச்சி ராஜகோபாலுடையது தான். கடந்த இருபது ஆண்டுகளாக அந்த வழக்கு விசாரணை தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்றால், அந்த வழக்கின் தீர்ப்பும் தற்போது புதுவிதமான வியப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன ஒன்று, தமிழில் வெளியான அந்த முதல் தீர்ப்பை படிக்காமலேயே அண்ணாச்சி ராஜகோபால் மரணமடைந்தார் என்பதுதான் மற்றொரு ஆச்சரியம்.