சிதம்பரம் அருகே பெராம்பட்டு கொள்ளிடம் ஆற்றில் சனிக்கிழமை இரவு 10 மணிக்கு மேல் 5 லாரிகள் மற்றும் பொக்லின் வாகன உதவிவுடன் மணல் திருட்டு நடைபெறுவதாக ஜெயங்கொண்டம்பட்டினம், திட்டுகாட்டூர், பெராம்பட்டு உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட கொள்ளிடம் ஆற்றுக்கு இரவு நேரத்தில் வந்தனர். அப்போது கொள்ளிடம் ஆற்றுக்குள் 5 லாரிகள் மற்றும் பொக்லின் வாகனம் மண் அள்ளுவதற்கு தயார் நிலையில் இருந்துள்ளது. இதனைப் பார்த்த பொதுமக்கள் லாரி மற்றும் பொக்லின் வாகனத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் தொடர்ந்து இரவு நேரங்களில் மணலை லாரி லாரியாக ஏற்றிச் செல்கிறார்கள் அப்பகுதியல் உள்ளவர்கள் கேட்டால் தகுந்த அனுமதியுடன் தான் வெளியே செல்கிறது என்று கூறுகிறார்கள். மேலும் இந்த பகுதியில் உள்ளவர்கள் வீடுகளில் ஆடு, மாடு கொட்டகையில் கொட்டுவதற்கும் வீட்டின் சாக்கடையில் ஈரத்தை போக்க எங்க ஊரில் உள்ள கொள்ளிடம் ஆற்றிலிருந்து சாக்கில் மண் எடுத்தால் அவர்களை பிடித்து ஆயிரம், இரண்டாயிரம் வசூலிக்கும் இந்த காவல்துறையினர் லாரி லாரியாக இரவு நேரத்தில் மணல் அள்ளி செல்கிறார்கள் தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் இரவு நேரத்தில் மணல் கொள்ளையில் ஈடுபடுவதால் இந்த லாரிகளை சிறை பிடித்துள்ளதாக அப்பகுதி கிராம மக்கள் கூறுகின்றனர்.
சம்பவ இடத்தில் இருந்த அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் தேவேந்திரன் .இது அண்ணாமலை நகர் காவல் நிலையம் அருகே பள்ளமாக உள்ள இடத்தில் கொட்டுவதற்கு எடுக்கப்படுகிறது. பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் எடுக்காமல் லாரிகளை திருப்பி அனுப்பி விட்டோம். இந்தப் பகுதியில் பல பேர் மணல் திருட்டில் ஈடுபடுகிறார். அவர்களை காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால் தற்போது அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என கூறினார்.