தமிழகம் முழுவதும் தமிழக அரசுக்கு எதிராக பேராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டே வருகிறது. பல்வேறு அரசு துறை அலுவலக அமைப்புகள் மட்டும் இன்றி ஒவ்வொரு மாவட்ட மக்களும் அவர்களின் அடிப்படை பிரச்சனைகளை கோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் டாஸ்மார்க் மாற்றுத்திறனாளி பணியாளர்கள் தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம் என்று அறிவித்துள்ளார்கள்.
தமிழ்நாடு டாஸ்மாக் மாற்றுத்திறனாளிகள் பணியாளர் நல்வாழ்வு சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூரில் பெற்றது.. கூட்டத்துக்கு, மாநில தலைவர் தூத்துக்குடி நாச்சியப்பன் தலைமை தாங்கி பேசினார். மாநில பொது செயலாளர் அரியகுமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், தமிழக அரசினால் நடத்தப்படும் டாஸ்மாக் நிறுவனத்தில் மாற்றுத்திறனாளி பணியாளர்கள் 600 பேர் கடந்த 15 ஆண்டுகளாக தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருகிறோம். தற்போது பொதுமக்களின் எதிர்ப்பு குரலாலினாலும், நீதிமன்ற நடவடிக்கையினால் டாஸ்மாக் கடைகள் இழுத்து மூடப்பட்டு வருகின்றனர். இதனால் மாற்றுத்திறனாளி பணியாளர்கள் பலர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.
டாஸ்மார்க் மாற்றுதிறனாளி பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று எங்களுடைய இந்த நெருக்கடியான காலத்தனை உணர்ந்து எங்களை காப்பாற்ற வேண்டும் என்று. பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் தமிழக அரசு கண்டு கொள்ளாததால் வருகிற ஆகஸ்டு மாதம் 2-ந்தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், கரூர் மாவட்ட தலைவர் கந்தசாமி உள்பட டாஸ்மாக் மாற்றுத்திறனாளி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.