
மணப்பாறை அடுத்த கள்ளிப்பட்டி பகுதியில் நேற்று இரவு சட்டவிரோதமாக சிலர் கிணற்று மண் அள்ளிச் செல்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் மணப்பாறை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு டிராக்டர் மற்றும் ஜே.சி.பி. ஏந்திரம் கொண்டு சிலர் மண்ணை அள்ளிக்கொண்டிருந்தனர். இந்நிலையில், காவல்துறையினர் அவர்களை நெருங்குவதைக் கண்ட டிராக்டர் மற்றும் ஜே.சி.பி. ஓட்டுனர்கள் தப்பி ஓடியுள்ளனர். அதனைத் தொடர்ந்து டிராக்டர் மற்றும் ஜே.சி.பி. வாகனங்களை கைப்பற்றிய காவல்துறையினர் அவற்றை காவல் நிலையம் எடுத்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து இன்று தப்பி ஓடிய வாகன ஓட்டுனர்கள் புதுக்கோட்டையைச் சேர்ந்த பாண்டியன் (42), நாவாடிப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் (31) உள்ளிட்ட இருவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள வாகன உரிமையாளர்கள் கள்ளிப்பட்டியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி (50) மற்றும் கோட்டைக்காரன்பட்டியைச் சேர்ந்த அடைக்கலராஜ் (31) உள்ளிட்ட இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.