Published on 21/07/2021 | Edited on 21/07/2021
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள பொட்டல் கிராமத்தில் எம்.சாண்ட்டுக்கு அனுமதி பெற்று விட்டு கேரளாவிற்கு ஆற்று மணல் கடத்தப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று (21/07/2021) விசாரணைக்கு வந்தபோது, 27,000 கியூபிக் மீட்டர் ஆற்று மணல் கேரளாவுக்கு கடத்தப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. மணல் கடத்தலில் பல்வேறு அரசுத்துறைகளின் தொடர்பு இருப்பதால் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கல்லிடைக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.