Skip to main content

அதே தேதி;தலைமை முதல்வர்தான்;மணப்பெண் தேடி ஊர்சுற்றும் எம்.எல்.ஏ மாப்பிளை!!

Published on 05/09/2018 | Edited on 05/09/2018

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் (தனி தொகுதி) அதிமுக எம்.எல்.ஏவான ஈஸ்வரன் திருமணத்திற்காக முன்பு நிச்சயிக்கப்பட்ட மணப்பெண் சந்தியா எம்.எல்.ஏவை பிடிக்கவில்லை என்றும் அவருக்கு தன் அப்பா வயது ஆகிறது என்றும் இந்த திருமணம் வேண்டாம் என்று தனது வீட்டை விட்டு வெளியே சென்றார். பிறகு கோபிசெட்டிபாளையம் போலீசார் சந்தியாவை மணப்பாறையில் கண்டுபிடித்து கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது சந்தியா எம்.எல்.ஏவை  திருமணம் செய்துகொள்ள எனக்கு விருப்பம் இல்லை என நீதிபதியிடம் கூறினார். பிறகு சந்தியாவை அவரின் பெற்றோரிடமே செல்ல நீதிபதி உத்தரவிட்டார்.

 

mla

 

 

 

இப்படி எம்.எல்.ஏ நிச்சயம் செய்த மணப்பெண் சந்தியா விவரகாரம் முடிவுக்கு வர  இதைத்தொடர்ந்து முன்பே முடிவுசெய்யப்பட்ட 12/9/2018 அன்று திருமணத்தை நடத்துவது என தீவிரமாக களமிறங்கிய மணமகன் எம்.எல்.ஏ ஈஸ்வரன் மணப்பெண் தேடி ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர், திருப்பூர், கோவை என பல்வேறு மாவட்டங்களில் அவரது உறவினர்கள், நண்பர்கள் என பலரையும் களமிறக்கினார். கடந்த மூன்று நான்கு நாட்களாக 20-க்கும் மேற்பட்ட மணப்பெண் விவரங்கள் கிடைத்திருக்கிறது. ஆனால் அந்த வரன்களை திருமணம் செய்ய எம்.எல்.ஏ ஈஸ்வரனுக்கு விருப்பம் இல்லை என கூறப்பட்ட நிலையில் அதற்கு காரணம் பல வரன்கள் பெண்ணக்கு 20 வயது என்றும் சில வரன்கள் ஏற்கனவே திருமணம் ஆகி  விவாகரத்து பெற்ற வரன்கள் என்றும் தெரியவருகிறது.

 

இதனால் விரக்தியடைந்த ஈஸ்வரன் எங்காவது 30 வயதுகொண்ட பெண்ணை சீக்கிரமாக பாருங்கள் என தனது உறவினர்களை வேகப்படுத்திவருகிறார். ஏன் இப்படி ஆவசரப்படுத்துகிறீர்கள் அதுதான் நாளாகி போச்சே கொஞ்சம் பொறுமையாகவே திருமணம் செய்யலாமே  என அவரது சொந்தகாரர்கள் கூற முடியவே முடியாது நான் திட்டமிட்ட படி 12-ஆம் தேதி ஏதோவொரு பெண்ணை திருமணம் செய்வேன். என் திருமணம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்தான் நடக்கும் எனகூறியிருக்கிறார் ஈஸ்வரன். 

 

 

 

திருமணத்திற்கு ஒரு வாரம்கூட இல்லாத நிலையில் மணமகன் ஈஸ்வரன் தாலிகட்ட தயாராக இருக்கிறார் ஆனால் அந்த தாலியை கட்டிக்கொள்ளும் ,மணமகள்தான் யார் என்று தெரியவில்லை. இந்தநிலையில் முதல்வர் எடப்பாடி அலுவலகத்திலிருந்து எம்.எல்.ஏ ஈஸ்வரனிடம் 12-ஆம் தேதி பண்ணாரியம்மன் கோவிலில் திருமணம் உண்டா? என கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு ஈஸ்வரன் கட்டாயமாக  உண்டு என பதில் கூறியிருக்கிறார். திரும்பவும் முதல்வர் அலுவலகம் மணப்பெண் யார் என கேட்க அதற்கு ஈஸ்வரன் திருமணத்திற்கு முன் 11-ஆம் தேதி யார் மணப்பெண் என்பதை தெரியப்படுத்துவேன் என கூறியிருக்கிறார். 43 வயதான எம்.எல்.ஏ மணமகன் ஈஸ்வரன்  தனக்கான துணையை தேடி அதி தீவிரமாக அள்ளும் பகலும் ஓயாமல் ஓடிக்கொண்டே இருக்கிறார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.