சென்னையில் கடத்தப்பட்ட பெண் குழந்தை சேலத்தில் மீட்பு
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று கடத்தப்பட்ட பெண் குழந்தை தனிப்படை போலீசார் சேலத்தில் மீட்கப்பட்டது
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா புளியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவரது மனைவி மணிமேகலையை மகப்பேறு சிகிச்சைக்காக சென்னை தாய் சேய் நல மருத்துவமனையில் அனுமதித்தார். பின்னர் மருத்துவமனையில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தன் மனைவியை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு ஊருக்கு திரும்பினார். மீண்டும் தன் மனைவியை பார்க்க வரவேயில்லை.
இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் மணிமேகலைக்கு பெண் குழந்தை பிறந்தது, இந்நிலையில் கணவன் கைவிட்ட நிலையில் நிராகதியான மணிமேகலை மருந்துவமனையில் தனக்கு உதவியாக இருந்த குழந்தைகள் பாதுகாப்பாளர் சுமித்ரா என்ற பெண்ணிடம் தனக்கு வேலை வாங்கித் தர கேட்டதாகத் தெரிகிறது, இதனால் மணிமேகலைக்கு வேலை வாங்கித் தருவதாகவும் , அதற்கு சில உடற்பரிசோதனை செய்ய வேண்டியுள்ளதாகவும் கூறி கைக்குழந்தையுடன் தாய் மணிமேகலையை இராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் சென்றுள்ளார், பின்னர் குழந்தை காரிலேயே இருக்கட்டும் என கூறி தாயை மட்டும் உள்ளே அழைத்துச் சென்றனர்,
இதற்கிடையில், மணிமேகலைக்கு சில நாட்களுக்கு முன் அறிமுகமான சேலத்தை சேர்ந்த வழக்கறிஞரான மணிமேகலை மற்றும் அவரது சகோதரி மேலும் ஒரு பெண்ணுடன் சேர்ந்து கைக்குழந்தையை சேலத்திற்கு கடத்திச் சென்றனர். பரிசோதனை முடித்து மணிமேகலை வெளியில் வந்து பார்த்தபோது அங்கிருந்த கார் குழந்தையுடன் மாயமாகியிருந்ததைக் கண்டு தாய் மணிமேகலை அதிர்ச்சியடைந்தார், தாய் மணிமேகலையை உள்ளே அழைத்து வந்த பெண்னையும் அங்கு காணவில்லை, செய்வதறியாது திகைத்த தாய் மணிமேகலை இராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் , மருத்துவமனை ஊழியர் சுமித்ராவை பிடித்து விசாரணை நடத்தினர் , அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் குழந்தையை தேடி சேலம் விரைந்தனர், இந்நிலையில் குழந்தையுடன் சேலத்தில் பதுங்கியிருந்த மணிமேகலை மற்றும் அவருடன் இருந்த மேலும் இருவரை பிடித்த போலீசார் குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
அரவிந்த்