Skip to main content

இனி தினமும் காய்கறி வாங்க முடியாது! புதிய கட்டுப்பாடு!

Published on 09/04/2020 | Edited on 09/04/2020

கரோனா வைரஸ் பரவலால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், பொதுவெளியில் மக்கள் நடமாடுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் 5 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்க சேலம் மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள பத்திரிகைக் குறிப்பு:

நாடு முழுவதும் கரோனா வைரஸின் பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதையும் மீறி வெளியே சுற்றித்திரியும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களுடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
 

salem police announced new rules and regulation vehicles

இருப்பினும், அத்தியாவசியப் பொருள்கள் வாங்கச் செல்வதாகக்கூறி, அதிகமான பொதுமக்கள் வாகனங்களில் வெளியே சுற்றித்திரிவதால் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாற வாய்ப்புள்ளது. 

எனவே, இதைத் தடுக்கும் விதமாகச் சேலம் மாநகர சாலைகளில் செல்லக்கூடிய வாகனங்களுக்கு ஏப்ரல் 9ம் தேதி (வியாழன்) முதல் சேலம் மாநகர காவல்துறை சார்பில் புதிதாக வாகனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.

கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக, அத்தியாவசியப் பொருள்கள் வாங்கச் செல்லும் பொதுமக்கள் ஐந்து நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே வெளியே சென்று தேவையான காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்கி வர வேண்டும். 
 

http://onelink.to/nknapp


இதைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தும் விதமாக, ஒவ்வொரு நாளும் வெளியே செல்லக்கூடிய வாகனங்களில் பதிவெண் தகட்டின் மீது ஒரு வண்ணம் என ஐந்து நாள்களுக்கும் ஒவ்வொரு வண்ணத்தால் அடையாள குறியீடு இடப்படும். அவ்வாறு அடையாளக் குறியீடு செய்யப்பட்ட வாகனம் அனுமதிக்கப்பட்ட நாள்களைத் தவிர மற்ற நாள்களில் தேவையின்றி வெளியே சுற்றித்திரிவது கண்டுபிடிக்கப்பட்டால்,மேற்படி வாகன ஓட்டி மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்வதுடன், வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்படுகிறது. இவ்வாறு சேலம் மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
 

சார்ந்த செய்திகள்