Skip to main content

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்தது!

Published on 16/10/2020 | Edited on 16/10/2020

 

 

salem district mettur dam water level

 

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்தது.

 

இன்று (16/10/2020) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 14,947 கனஅடியில் இருந்து 10,028 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.66 அடியாகவும், நீர் இருப்பு 64.40 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 14,000 கனஅடி; கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்க்கு வினாடிக்கு 900 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

 

இதனிடையே, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து வினாடிக்கு 14,000 கனஅடியில் இருந்து 12,000 கனஅடியாக குறைந்துள்ளது.
 

 

 

சார்ந்த செய்திகள்