Skip to main content

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!

Published on 27/09/2020 | Edited on 27/09/2020

 

SALEM DISTRICT METTUR DAM WATER LEVEL

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் குறைந்துள்ளது.

 

இன்று (27/09/2020) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 27,077 கனஅடியில் இருந்து 7,679 கனஅடியாகக் குறைந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 20,000 கனஅடியும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 850 கனஅடியும் நீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.12 அடியாகவும், நீர் இருப்பு 63.70 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது. 

 

இதனிடையே, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர்வரத்து வினாடிக்கு 15,000 கனஅடியில் இருந்து 8,000 கனஅடியாக சரிந்துள்ளது.காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்