Skip to main content

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,957 கன அடியாக உயர்வு!

Published on 25/08/2020 | Edited on 25/08/2020

 

SALEM DISTRICT METTUR DAM WATER LEVEL

 

 

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து உயர்ந்துள்ளது.

 

இன்று (25/08/2020) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 5,938 கன அடியில் இருந்து 6,957 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 96.80 அடியாகவும், நீர் இருப்பு 60.72 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது. டெல்டா பாசனத் தேவைக்காக காவிரியில் நீர் திறப்பு விநாடிக்கு 18,000 கன அடியாகவும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடியாகவும் இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்