Skip to main content

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,160 கனஅடியாக உயர்வு!

Published on 23/08/2020 | Edited on 23/08/2020

 

salem district mettur dam water level

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

 

இன்று (23/08/2020) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7,271 கனஅடியில் இருந்து 9,160 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.50 அடியாகவும், நீர்இருப்பு 62.91 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது.

 

அணையில் இருந்து டெல்டா பாசனத்தேவைக்காக காவிரியில் நீர் திறப்பு 18,000 கனஅடியாகவும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கனஅடியாகவும் உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்