Published on 02/02/2020 | Edited on 02/02/2020
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,250 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் அணைக்கான நீர்வரத்து 53 கனஅடியிலிருந்து 115 கனஅடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.21 அடியாகவும், நீர் இருப்பு 74.50 டிஎம்சியாகவும் இருக்கிறது. டெல்டா பாசனத்திற்கான நீர் திறப்பு ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.