Skip to main content

கெளரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து சேலம் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published on 06/09/2017 | Edited on 06/09/2017
கெளரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து சேலம் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்

கன்னட சமூக, அரசியல் வார இதழான லங்கேஷ் இதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளராக இருந்த காலம் சென்ற லங்கேஷ் அவர்களின் மகள் கெளரி (வயது- 54). லங்கேஷ் அவர்களின் மறைவுக்குப் பிறகு இவர் அந்த இதழின் ஆசிரியராக பணியாற்றினார். பின்னர் கெளரி லங்கேஷ் என்ற இதழை தொடங்கிய கெளரி அதன் ஆசிரியராக இருந்து வருகிறார்.

கிராமப்புர மக்கள் மேம்பாடு, ஜாதி பாகுபாடு ஒழிப்பு, ஆயுதப் போர் நடத்தும் போரளிகளை சமூக, அரசியல் இயக்கத்துக்கு கொண்டு வருதல், போன்ற பணிகளை முன்னெடுத்து செய்து வந்தவர் கெளரி. இவருக்கு கடந்த இரு ஆண்டுகளாகவே பல மதவாத அமைப்புளிடம் இருந்து கொலை மிட்டல் வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு கெளரி லங்கேஷ் அவரது வீட்டில் அடையாளம் தெரியாத ஆட்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இதை கண்டித்து இன்று மதியம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இதழியல் துறையினர் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

- சிவசுப்பிரமணியம்

சார்ந்த செய்திகள்